லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
அத்துடன் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தை கண்டிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக