ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.
புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது.
இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை,இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை,ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது.கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.இதற்குமே
கொழுத்து
வாழ்க்கை தேடி வந்த நாட்டையும் மக்களையும் குறை சொல்வதாய் சிலர் முணுமுணுப்பது என் காதுகளுக்கு கேட்கிறது.அடைக்கலம் தந்த நாட்டை ஆலயங்காளாக நினைக்கும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களில் நானும் ஒருவன்.நாயிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட இந்த அகதிகளுக்கு கொடுக்கிறார்கள் இல்லையே என்று நினைக்கும் போதுதான் மனதின் ஒரு ஓரத்தில் வலிக்கிறது.
உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இதை ஒரு சீனாக்காரனோ இல்லை அவுஸ்ரேலிய பழங்குடியினரோ செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?அவுஸ்ரேலிய குடியுரிமை உடைய அவுஸ்ரேலிய இளையோர் 4 பேர் உண்ணாவிரத போராட்டம் என்று ஒரு 5 நிமிடத்துக்கு இருந்தால் என்ன ஆகியிருக்கும்?அதுவே இந்த நாட்டின் முக்கிய பிரச்சினையாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகியிருக்கும்.நாடே திரும்பிப்பார்த்து கேள்வி கேட்டிருக்குமா? இல்லையா?ஆனால் அவுஸ்ரேலிய மண்ணின் குடியுரிமை பெற்ற இளையோர் 72மணிநேரத்துக்கு மேலாக பட்டினியிருந்து குரல் எழுப்பி என்ன பலன்?கடைசியில் அவர்கள் அந்த புனிதமான அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டதுதான் வேதனை தருகின்றது.மகாத்மாகாந்தி மேல் கொண்ட வெறுப்பும் கோபமும் இன்னும் வெள்ளைக்காரர்களுக்கு போகவில்லை என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.
ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் சமத்துவமாக சரிசமானமாக வேறுபாடின்றி பார்க்கவேண்டியது ஒரு நல்ல மாந்தை நேய அரசின் கடமையாகும்.மனிதநேயம் என்பதை வெறும் வாயினால் பேசினால் மட்டும் போதாது.மனச்சாட்சியோடு அதை செயல் வடிவத்திலும் காட்டவேண்டும்.
அவ்வாறு வேறுபாடு காட்டப்படும் இடத்து அதை தட்டிக்கேட்க வேண்டியது எமது உரிமை.ஆனால் இது நமது வேலையல்ல.தாயகத்தில் நாள்தோறும் 50,100 என நரபலி எடுக்கிறது சிறிலங்கா பேரினவாத இராணுவம்.இதற்கு துணைபோகிறது இந்திய ராணுவமும் சர்வதேச நாசகார படைகளும்.
புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் இப்போது ஒரு தீர்மானத்தை ஒருமனதாக எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.
விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா?தலைவர் பிரபாகரன் வன்னியை விட்டு ஓடிவிட்டாரா?விடுதலைப்புலிகளுக்
ஒரு மாதமாக 1500 அப்பாவி பொதுமக்களை நரபலி எடுத்து 5000 விடுதலைப்புலிகளை கொன்றொழித்துவிட்டதாக சர்வதேசத்துக்கு கணக்கு காட்டியிருக்கிறது மகிந்த அரசாங்கம்.அதை அப்படியே மண்டையை ஆட்டி ஏற்றுக்கொண்டிருக்கிறது சர்வதேசமும் மனித நேய அமைப்புக்களும்.கோடிக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழர்கள் கொட்டும் வெய்யிலிலும் உறைபனியிலும் நின்று "எங்களுக்கு நீதி வேண்டும்,எங்கள் சொந்தங்களை மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்" என்று கதறிக்கூக்குரல் கொடுத்தும் சர்வதேசம் இறுக கண்மூடி தூங்குகின்றது.இல்லை தூங்குவதுபோல் நடிக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் 2000 உயிர்கள் அநியாயமாக காவுகொள்ளப்பட்டுள்ளது.2500 இக்கும் அதிகமானவர்கள் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள். கோவில்கள்,தேவாலயங்கள்,வைத்தி
வயிறுபிளந்து குடல் சிதறிக்கிடக்கும் சின்னக்குழந்தையும் தள்ளாத வயதில் தலை இல்லாமல் துண்டுதுண்டாய்க்கிடக்கும் அப்புவும் ஆச்சியும் விடுதலைப்புலிகளா?இல்லை இரண்டு கைகளையும் இழந்து வலியால் குழறும் சின்னப்பொடியன் புலியா?என்னடா உங்கள் நீதி?காசாவில் நாலு வயது குழந்தை இறந்து விட்டால் வாய் கிழிய கத்துகிறீர்கள்.நாய் ஒன்று நடுவீதியில் அடிபட்டால் நாலு பக்கத்துக்கு அனுதாப கட்டுரை எழுதும் சர்வதேச மனிதநேய வாதிகளே கொஞ்சம் மனச்சாட்சியோடு எங்கள் மக்களை திரும்பி பாருங்கள்.இல்லையென்றால் நீங்கள் எடுத்திருக்கும் சில இறுக்கமான தீர்மானங்களையும் மனச்சாட்சி இல்லாத முடிவுகளையும் போல நாங்களும் அவசரமாக எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறோம்.
தமிழர்கள் இழிச்சவாயர்கள்,குட்டக்குட்ட குனியும் மடையர்கள்.!,எது செய்யினும் ஏன் என்று கேட்பதற்கு நாதியற்றவர்கள்.!.தமிழன் உயிர் நாயிலும் கேவலமானது.!.மதிப்பில்லாதது.தமி
உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக்கொடியோ தேசியக்கொடியாகலாம்
எனக்கு என் அப்பு கட்டிய கொவணத்துணியே தேசியக்கொடி
ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.
பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்
கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம்-ஆனாலும்
நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான்.!
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது
கடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது
நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்
உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?
ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு அந்த மாதிரி
உடுக்கோசையும் காவடிஆட்டமும்தான் என்றும் எனக்கு முன்மாதிரி
அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிட
அம்மணமாக வாழ்வது மேல்.!
தமிழ்ப்பொடியன்
சபா ரமணா

























